ஃப்ளாஷ் நியூஸ்

  மக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வெளியீடு கண்டது களம்/சமூக-&--இலக்கிய இதழ்

  மக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வெளியீடு கண்டது களம்/சமூக-&--இலக்கிய இதழ்

  12/02/2015

  img img

  கடந்த 3.2.2015ஆம் நாளன்று கூலிம் தியான ஆசிரமத்தில், நவீன இலக்கியச் சிந்தனைக்களத்தின் ஏற்பாட்டில் ‘களம்’ சமூக இலக்கிய இதழ் மிகவும் சிறப்பான முறையில் வெளியீடு கண்டது. தமிழகத்தைச் சேர்ந்த மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இலக்கியவாதியுமான பேராசிரியர் அ.ராமசாமி களம் இதழை வெளியிட, கூலிம் தியான ஆசிரமத்தின் ஆலோசகரான சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி முதல் இதழைப் பெற்றுக் கொண்டார்.

  சமூகத்தின் கற்பனைவளத்தையும், சிந்தனைத்திறனையும் வளர்க்கும் வகையிலும்  சமூகத்தின் வாசிப்பு ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையிலும் ‘களம்’ இதழ் இரு மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் எனக் களம் இதழின் ஆசிரியர் எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார். மேலும் களம் இதழுக்கு, கட்டுரையாளர் அ.பாண்டியனும் எழுத்தாளர் தினகரனும் தன்னோடு ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

  இதுபோன்ற தரமான வாசிப்பை முன்னெடுக்கும் தமிழ் இதழ்கள் அதிகம் வந்தால்தான் நம்முடைய சிந்தனைத்தரமும் உயரும் எனக் கூலிம் ஆசிரமத்தின் ஸ்தாபகரும் இலக்கிய ஆர்வலருமான சுவாமி பிரம்மானந்தா கேட்டுக்கொண்டார்.களம் முதல் இதழில், பிரிட்டிஷ் புத்தாக்கப் பிரிவில் இரட்டைத் தங்க விருதுகளை வென்று மலேசியாவிற்கே பெருமை சேர்த்தத் தமிழ்ப்பள்ளி மாணவர்களான பிரவினா இராமகிருஷ்ணன், ரஷிகேஷ் இராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அந்த இரு மாணவர்களும் களம் இதழ் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர். அவர்களுக்குக் களம் இதழ் சார்பாக நூல் பரிசளிப்பு வழங்கப்பட்டது.

  களம் இதழ் உங்கள் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் சென்றடைய வேண்டுமென்றால் ஆசிரியர் குழுவைத் தொடர்புகொள்ளலாம். வாசிக்கும் ஒரு தலைமுறையாக மாறலாம். தொடர்புக்கு: ஆசிரியர் கே.பாலமுருகன் 0164806241.

   

  பின்செல்